/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பயன்பாடு தடுப்பு அரசு பள்ளியில் விழிப்புணர்வு
/
புகையிலை பயன்பாடு தடுப்பு அரசு பள்ளியில் விழிப்புணர்வு
புகையிலை பயன்பாடு தடுப்பு அரசு பள்ளியில் விழிப்புணர்வு
புகையிலை பயன்பாடு தடுப்பு அரசு பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 15, 2025 01:33 AM
தர்மபுரி, புகையிலை பயன்பாடு இல்லாத மண்டல பகுதி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மூக்கனஹள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
புகையிலை பயன்பாடு இல்லாத மண்டல பகுதி குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை மூலம், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தர்மபுரி அடுத்த, மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சின்னசித்தன் தலைமையில், புகையிலை பொருள் பயன்பாடில்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, மூக்கனஹள்ளி அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள சாலையில், புகையிலை பயன்பாடில்லாத மண்டல பகுதி என எழுதப்பட்ட வரைபட காட்சியை தலைமையாசிரியர் திறந்து வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ரமேஷ், விக்ரமன், மோகன சுந்தரி, சுபாஷினி வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தேசிய பசுமைப்படை அமைப்பும், போதை பொருள் எதிர்ப்பு மன்றமும் இணைந்து செய்திருந்தனர்.