/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 24, 2024 02:07 AM
தர்மபுரி: ''காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தர்மபு-ரியில் அக்., 4-ல் நடக்கவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்,'' என, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., கூறினார்.
தர்மபுரியில் நேற்று நடந்த மாவட்ட ஒருங்கிணைந்த, பா.ம.க. நிர்-வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நிரு-பர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, அனைத்து ஏரி, குளங்களை நிரப்ப, காவிரி
உபரிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி, வரும் அக்., 4 அன்று தர்மபுரியில், அரை நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போராட்டம் யாருக்கும் இடையூறு இன்றி நடத்தப்-படும்.
வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்களை நேரடியாக சென்று அவர்களிடம் ஆதரவை கோரப்போகிறோம். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், அப்போதைய முதல்வர் மற்றும் தற்போ-தைய, தி.மு.க., ஆட்சியில் முதல்வர்
ஸ்டாலினிடம் மனு கொடுத்தோம். இது குறித்து, எந்த ஒரு நடவடிக்கையும் இது-வரை எடுக்கவில்லை. எனவே, காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி, அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில்,
பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.