/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பல்லுயிர் பாதுகாப்பு தினவிழா; மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
/
பல்லுயிர் பாதுகாப்பு தினவிழா; மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
பல்லுயிர் பாதுகாப்பு தினவிழா; மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
பல்லுயிர் பாதுகாப்பு தினவிழா; மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
ADDED : மே 24, 2024 07:03 AM
தர்மபுரி : மல்லாபுரம் கிராமத்தில் பல்லுயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி, மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தர்மபுரி அடுத்த மல்லாபுரம் கிராமத்தில், பல்லுயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி, தர்மபுரி இயற்கையை காப்போம் குழுவினர் நேற்று, மரக்கன்றுகளை நட்டனர். இதில், மல்லாபுரம் சாலையோரத்தில், புங்கன், புளி, அத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர். இப்பகுதியிலுள்ள கோவில் நிலத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து, இக்குழு உறுப்பினர்கள் இணைந்து, பல்லுயிர் பெருக்க சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மரக்கன்று நடுவோம் என உறுதி மொழியேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், இயற்கையை காப்போம் நிறுவனர் தாமோதரன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், வீரமணி, ரமேஷ், பிரேம்குமார் மற்றும் தன்னார்வலர்கள் விக்னேஷ், சென்றாயன், ராகுல், புகழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.