/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்
/
மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜன 04, 2025 01:37 AM
தர்மபுரி, ஜன. 4-
தர்மபுரி அடுத்த, அதகப்பாடியை சேர்ந்த டெய்லர் முருகேசன், 40. இவரை  கடந்த, 1 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முருகேசனை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில்
ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்து, சுய நினைவு இல்லாமல் இருந்தார். குணமடைய வாய்ப்பில்லாததால், முருகேசனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
நேற்று, முருகேசனுக்கு அறுவை சிகிச்சை செய்து, இரண்டு கண்கள், சிறுநீரகம் மற்றும் இதயம் ஆகியவற்றை சேலம், கோவை, சென்னை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, முருகேசனின் உடலுக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

