/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை
/
தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை
தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை
தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை
ADDED : அக் 15, 2025 01:37 AM
மாரண்டஹள்ளி, தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த அத்திமுட்லு போயர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி -சினேகா. இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு சினேகா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு உறங்க சென்றுள்ளார்.
காலையில் பார்த்தபோது குழந்தை மூச்சின்றி இருந்துள்ளது. குழந்தையை உடனடியாக மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, அத்திமுட்லு வி.ஏ.ஓ.,வெங்கடேஷ் அளித்த புகார்படி, மாரண்டஹள்ளி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.