/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி
/
கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி
ADDED : அக் 15, 2025 01:37 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகளை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள விளையாட்டு போட்டிகளில், 100 மீட்டர், 200, 400, 600, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில், 500-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பிளஸ் 2 படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்லுாரி ஆர்வமூட்டல் களப்பயண வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இதில் தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, நகராட்சி சேர்மன் லட்சுமி, நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா உட்படபலர் கலந்து கொண்டனர்.