ADDED : நவ 01, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
ஒகேனக்கல்: பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியை சேர்ந்தவர் மணி. இவரது மகன்கள் அமரேசன், 43, அன்பரசு, 36; கட்ட மேஸ்திரிகள்.
இவரின் தந்தை இறந்ததில் இருந்து இருவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, அமரேசன் தன் வீட்டின் முன் அமர்ந்து குடிபோதையில் பேசியுள்ளார். அப்போது, வீட்டின் பின்புறம் சோளத்தட்டு அறுத்து கொண்டிருந்த அன்பரசு, அண்ணனை கண்டித்து, தான் வைத்திருந்த அரிவாளால் அண்ணனின் கழுத்தில் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த அமரேசனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அமரேசனின் மனைவி புகார் படி ஒகேனக்கல் போலீசார், தம்பி அன்பரசுவை கைது செய்தனர்.
