ADDED : நவ 01, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த வாரம் தொடர் மழை பெய்தது.
தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நள்ளிரவு முதல், அதிகாலை வரை குளிர் நிலவியது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 முதல், 8:00 மணி வரை, அரூர், தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், பனிமூட்டம் நிலவியது. இத னால் சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மற்றும் கூலிவேலைக்கு செல்லும் மக்கள் அவதியடைந்தனர்.
