UPDATED : நவ 01, 2026 02:19 AM
ADDED : நவ 01, 2026 01:53 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஊராட்சி மருக்காலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், சுயம்பு ஓம் ஸ்ரீ வைர ஆறுமுகம் அழகு முருகன் அறக்கட்டளை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமில், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள், பொதுமக்களுக்கு கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கிட்டப்பார்வை, துாரப்பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கினர். கலந்து கொண்ட, 142 பேரில், 22 பேர் அறுவை சிகிச்சைக்கு, தேர்வு செய்யப்பட்டு, சேலம் அழைத்து செல்லப்பட்டனர். முகாம் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
