/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 31க்குள் பதிய அழைப்பு
/
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 31க்குள் பதிய அழைப்பு
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 31க்குள் பதிய அழைப்பு
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 31க்குள் பதிய அழைப்பு
ADDED : ஜன 29, 2025 07:11 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் நடப்பு ஆண்டில் நவரை பருவத்தில் பரவலாக நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர். பருவகால மாற்றங்கள், பூச்சி நோய் தாக்குதல்கள் அல்லது இயற்கை இடர்பாடுகளால் நெல்லில் மகசூல் குறைவு ஏற்படும் போது, விவசாயிகள் பாதிக்காமல் இருக்க, பயிர் காப்பீடு மிகவும் அவசியம். நெல் ஒரு ஏக்கருக்கு காப்பீடு செய்ய, 557 ரூபாய் மட்டுமே. கடன் பெறும் விவசாயிகள், கடன்பெறா விவசாயிகள், குத்தகை விவசாயிகள் என அனைவரும், பயன்பெறலாம். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் மக்கள் கணினி மையம் மூலம் வரும், 31க்குள் பயிர் காப்பீடு செய்யலாம்.
ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்ச இழப்பீடாக நெல்லுக்கு, 37,100 ரூபாய் வரை வழங்கப்படும். விதைப்பு முதல் அறுவடை வரையுள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளுக்கும் வருவாய் கிராம வாரியாக, சோதனை அறுவடை செய்து, இழப்பின் அளவை கணித்து, பயிர் காப்பீடு வழங்க உள்ளதால், மகசூல் இழப்பின்போது காப்பீட்டு தொகை தவறாமல் கிடைக்கும். எனவே விவசாயிகள், அருகிருள்ள மக்கள் கணினி மையத்தை அணுகி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

