/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கல்லாவி எஸ்.ஐ., கைது
/
ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கல்லாவி எஸ்.ஐ., கைது
ADDED : அக் 02, 2024 01:51 AM
ரூ.2,500 லஞ்சம் வாங்கிய
கல்லாவி எஸ்.ஐ., கைது
ஊத்தங்கரை, அக். 2-
கல்லாவியில் விவசாயியிடம், 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்
கரையை அடுத்த எம்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் அழகரசன், 36, விவசாயி. இவரது நிலத்தின் வழியாக செல்லும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மின் ஒயர் எரிந்தது தொடர்பாக, கல்லாவி போலீசில் அழகரசன் மீது சண்முகம் புகார் கொடுத்தார். இதன் மீது விசாரணை நடத்திய கல்லாவி எஸ்.ஐ., ரவி, புகாரை சுமூகமாக முடித்து தர, அழகரசனிடம், 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதை கொடுக்க விரும்பாத அழகரசன், இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுரையின் படி, ரசாயனம் தடவிய, 2,500 ரூபாயை நேற்று மாலை, 5:00 மணிக்கு எஸ்.ஐ., ரவியிடம்,
அழகரசன் கொடுத்தார். அதை வாங்கிய, எஸ்.ஐ., ரவியை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையிலான, இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்.ஐ., விஜயகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

