/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உடைந்து விழும் நிலையில் உள்ள குடிநீர்தொட்டி இடிக்கப்படுமா
/
உடைந்து விழும் நிலையில் உள்ள குடிநீர்தொட்டி இடிக்கப்படுமா
உடைந்து விழும் நிலையில் உள்ள குடிநீர்தொட்டி இடிக்கப்படுமா
உடைந்து விழும் நிலையில் உள்ள குடிநீர்தொட்டி இடிக்கப்படுமா
ADDED : அக் 12, 2024 01:03 AM
உடைந்து விழும் நிலையில் உள்ள
குடிநீர்தொட்டி இடிக்கப்படுமா
தர்மபுரி, அக். 12-
உடைந்து விழும் நிலையில் உள்ள, மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை உடைத்து அப்புறப்படுத்த அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், இண்டூர் பஞ்.,க்கு உட்பட்ட பாவாடி தெருவில், 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக, 10 ஆண்டுக்கு முன், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் கான்கிரீட் கலவைகள் உடைந்து விழுகிறது. உடைந்து விழும் நிலையில், அபாயகரமாக உள்ள, குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிய தொட்டியை கட்ட வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.