/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாடு திருடிய இருவர் மீது வழக்கு பதிவு
/
மாடு திருடிய இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 23, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மானியதஹள்ளி பஞ்., கடுக்காபட்டியான் கொட்டாயை சேர்ந்த ஜோதி, 47, என்பவர், 2 மாடு, 3 ஆடுகள் வைத்து பராமரித்து வந்தார். கடந்த மாதம், 31 அன்று அதிகாலை, 2 மாடுகளை காணவில்லை.
இது குறித்து, அருகில் உள்ள வீடுகளில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், பொடாரன் கொட்டாயை சேர்ந்த முனுசாமி, 50, மேல் பூரிக்கல்லை சேர்ந்த பச்சையம்மாள், 43, ஆகிய இருவரும் மாடுகளை திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து, ஜோதி அளித்த புகார்படி, தொப்பூர் போலீசார் முனுசாமி, பச்சையம்மாள் ஆகிய இருவர் மீதும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.