/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ்
/
இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ்
ADDED : மார் 13, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த தீர்த்தமலையில், இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடு மற்றும் ஜாதிச்சான்றிதழ் இல்லாததை அறிந்த அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஒரே வாரத்தில் ஜாதிச்சான்றிதழ் தயார் செய்து, நேற்று தீர்த்தமலைக்கு சென்ற ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், 7 இருளர் இன குடும்பத்திற்கு ஜாதிச்சான்றிதழ்களை வழங்கினார்.
ஆர்.ஐ., சத்தியபிரியா, வி.ஏ.ஓ., கோவிந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

