ADDED : ஜூலை 16, 2024 01:58 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜரின், 122 வது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் கவுதமன், பள்ளி மேலாண்மை குழு பொருளாளர் கோகுல், கல்வியாளர் நேதாஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தொடர்ந்து பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பா-டுகளை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ் தென்றல், உடற்கல்வி ஆசிரியர் சேகர், செந்தில், குப்புசாமி செய்திருந்தனர். முதுகலை ஆசிரியர் கிருஷ்ணன் நன்றி கூறினார். பாப்பிரெட்டிப்-பட்டி, கடத்துார், வீரகவுண்டனுார், உள்ளிட்ட அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.* வேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், காம-ராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பை-நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் காம-ராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.