மக்கள் தொகை கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கம் துவக்கம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கம் துவக்கம்
ADDED : ஜூலை 19, 2026 02:17 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்-கொடுப்பு -குறித்த, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு வாகனம் மற்றும் கையெழுத்து இயக்-கத்தை, மாவட்ட கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு ஆக., 1 முதல், ஆக., 30 வரை மாவட்டம் முழு-வதும் நடத்தப்பட உள்ளது.
இதில், பொதுமக்கள் தங்களது விபரங்களை, தாங்களே பதிவு செய்துகொள்ளும் சுயக் கணக்கெடுப்பு வசதி அறிமுகப்படுத்தப்-பட்டுள்ளது. இதனை வரும், 31 வரை https://se.census.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி, தங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, குடும்ப விபரங்களை எளிதாக பாது-காப்பான முறையில் பதிவு செய்து, எஸ்.இ., ஐடி.,யை பெற்றுக் கொள்ளலாம். கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது, அந்த ஐடி.,யை வழங்கினால் போதுமானது.இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு வாகனம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, தர்மபுரி ஆர்.டி.ஓ., ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
