மக்கள் தொகை கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கம் துவக்கம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கம் துவக்கம்
ADDED : ஜூலை 25, 2026 05:41 AM
அரூர்; அரூர் பஸ் ஸ்டாண்டில், மக்கள் தொகை கணக்க-டுப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்-கத்தை நகராட்சி கமிஷனர் விஜயாஸ்ரீ தொடங்கி வைத்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்-டத்தில், வீட்டு பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு ஆக., 1 முதல், 30 வரை நடத்தப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது விபரங்-களை, தாங்களே பதிவு செய்து கொள்ளும் சுயக் கணக்கெடுப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்-ளது. இதனை வரும், 31 வரை https://se.census.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி, தங்களது மொபைல் எண்ணை உள்-ளீடு செய்து, குடும்ப விபரங்களை எளிதாக பாது-காப்பான முறையில் பதிவு செய்து, எஸ்.இ., ஐடி.,யை பெற்றுக் கொள்ளலாம்.கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது, அந்த ஐடி.,யை வழங்கினால் போதுமானது. இந்நி-லையில், அரூர் பஸ் ஸ்டாண்டில் கையெழுத்து இயக்கத்தை நகராட்சி கமிஷனர் விஜயாஸ்ரீ தொடங்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் பிரேமா, நகரமைப்பு ஆய்வாளர் சிந்தியா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு
கையெழுத்திட்டனர்.
