/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
/
சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED : ஜூன் 15, 2025 02:09 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே, சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தர்மபுரி அருகே உள்ள, ஆலங்கரை கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்ன
கேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, 18ம் ஆண்டு தேர்திருவிழா நேற்று நடந்தது. கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று சென்ன
கேசவ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து, சுதர்சன யாகம் நடந்தது. பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி பூதேவி உடன் அமர்ந்து
சென்னகேசவ பெருமாள் சுவாமி திருவீதி உலா வந்தார். இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.