/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செந்தில் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
/
செந்தில் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
ADDED : நவ 15, 2025 02:02 AM
தர்மபுரி: தர்மபுரி, செந்தில் மெட்ரிக் பள்ளியில் நேருவின், 136வது பிறந்த-நாளையொட்டி நேற்று, குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்-டது.
பள்ளி தலைவர் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, நிர்வாக அலுவலர் ரபிக் அகமது, முதல்வர் வள்ளியம்மாள், மழலையர் மற்றும் தொடக்கநிலை பிரிவு முதல்வர் மலர்விழி, தொடக்கப்பிரிவு பொறுப்பாளர் ஐஸ்வர்யா தேவி, பொறுப்பாளர்கள் மற்றும் ஆசி-ரியர்கள், அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், குழந்தைகள் தினம் குறித்து, பாடல் மூலம் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அதை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் ஜவஹர்லால் நேருவின் வண்ணப்படம் வரைந்து, குழந்தைகள் அதன் முன் புகைப்படம் எடுத்து, குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.

