/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலை பொது பேரவை கூட்டம்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலை பொது பேரவை கூட்டம்
ADDED : நவ 15, 2025 02:05 AM
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரம-ணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில், நேற்று, 8வது பொது பேரவை கூட்டம், மேலாண்மை இயக்குனர் பிரியா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், 2022--2023 முதல், 2024--2025 வரையிலான, மூன்று ஆண்டுகளுக்கு ஆலை ஈட்டிய நிகர லாபத் தொகையான, 29.67 கோடி ரூபாயை கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகளின்-படி, 2022--2023ம் ஆண்டுக்கு, 5 சதவீதமும், 2024--25ம் ஆண்டுக்கான அதிகபட்ச, 14 சதவீத தொகையாக மொத்தம், பங்கு ஒன்றுக்கு, 66 ரூபாய் வீதம் வழங்க பொதுப்பேரவையில் தீர்மானித்தபடி, அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும், ஆலைக்கு, 33 ஆண்டுகளாக தொடர்ந்து கரும்பு வழங்கி வரும் உறுப்பினர்களுக்கு ஆலையின் சார்பில், பாராட்டு சான்றுடன், ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. வரும், 2025-26ம் ஆண்டு அரவைப்பருவம் வரும் டிசம்பர் திட்டமிட்டபடி துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

