/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
/
ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 16, 2025 02:52 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்-நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்-டது. ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன் தலைமை வகித்தார்.
விழாவில், பள்ளி மாணவர்கள் இடையே மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சி, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாண-வியருக்கு பள்ளித்தாளாளர் சாந்தி வேடியப்பன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஸ்வரி, மணிமேகலை, பிரவீனா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்-டனர்.

