/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேச ஒற்றுமை சைக்கிள் பயணம் தர்மபுரி வந்த குழுவுக்கு வரவேற்பு
/
தேச ஒற்றுமை சைக்கிள் பயணம் தர்மபுரி வந்த குழுவுக்கு வரவேற்பு
தேச ஒற்றுமை சைக்கிள் பயணம் தர்மபுரி வந்த குழுவுக்கு வரவேற்பு
தேச ஒற்றுமை சைக்கிள் பயணம் தர்மபுரி வந்த குழுவுக்கு வரவேற்பு
ADDED : நவ 16, 2025 02:52 AM
தர்மபுரி: சர்தார் வல்லபபாய் பட்டேலின், 150வது பிறந்த நாளையொட்டி, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, காஷ்மீர் முதல் கன்-னியாகுமரி வரை, 4,249 கி.மீ., சைக்கிள் பயணத்தை ஒரு குழு மேற்கொண்டுள்ளது.
கடந்த நவ., 1ல் காஷ்மீரிலிருந்து பய-ணத்தை தொடங்கிய இக்குழுவில், 20 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தினசரி, 250 கி.மீ., துாரம் பயணித்து, 9 மாநிலங்களை கடந்து, 10வது மாநிலமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தமிழகம் வந்-தடைந்தனர். நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்டத்திறகு வந்த-வர்களை, தங்கம் மருத்துவமனை மருத்துவர் வானதி மற்றும் குழுவினர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நேற்று காலை, மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர். பயணத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தருண் வாதவா, கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். துணை ஒருங்கி-ணைப்பாளர் செஷாந்க் ரோகிலா, வழித்தட ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் ரட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சைக்கிள் பயணம் செய்யும் குழுவினருக்கு ஆங்காங்கே, சமூக சேவை நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வ-லர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

