/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
/
புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : நவ 16, 2025 02:51 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, பென்னாகரம் சாலையில், சேலம்-பெங்களூரு மற்றும் தர்மபுரி---நெல்லுரு என இரு தேசிய நெடுஞ்சாலை அருகே, தனியார் பங்களிப்புடன், 39.14 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட், 10 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு வருகி-றது. இதில், ஒரே நேரத்தில், 55 பஸ்கள் உள்ளே வந்து செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இங்கு குடிநீர், சுகாதார வளாகம், பஸ்கள் நிற்கும் இடங்கள், நடைபாதை, மழைநீர் வடிகால் பணிகள், பயணிகள் அமர இருக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டி-யுள்ளது. மேலும், டிச., 14ல் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்-டுக்கு திறந்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
இதையொட்டி, மாவட்ட கலெக்டர் சதீஷ், நேற்று பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதில், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ரமேஷ், நகராட்சி சேர்மன் லட்சுமி, நகராட்சி கமிஷ்னர் சேகர், ஆர்.டி.ஓ., ஜெய தேவராஜ், ஸ்ரீ விஜய் வித்யா-லயா கல்வி நிறுவனங்களில் தலைவர் இளங்கோவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகா மற்றும் பலர் உடனிருந்தனர்.

