ADDED : நவ 16, 2025 02:50 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி ஒன்றியம், சாமிசெட்டிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட ஏரி கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக துார் வாராப்படாமல், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. ஏரியின் கரை பகுதி வலுவிழந்த நிலையில் இருந்தது. ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாய், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதனால், ஏரி பாசனத்தை நம்பியிருந்த விவசாய நிலங்கள் பாதிக்-கப்பட்டதுடன், நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. கடந்த மாதம் பெய்த மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, நிலத்தடி நீர்-மட்டம் உயர்ந்தது.இதை பயன்படுத்தி, மழைநீரை தொடர்ந்து சேமிக்க, ஏரியை துார்வார நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பி.டி.ஓ., அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை நம்பி காத்திருக்காமல், கிராம மக்களின் சொந்த செலவில், ஏரியை துார்வார முடிவெ-டுத்தனர். அதைதொடர்ந்து, நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம், ஏரியை துார்வாரும் பணியை, கிராம மக்கள் முன்னி-லையில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.
இதில், நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்னமூர்த்தி, நல்லம்பள்ளி பி.டி.ஓ.,க்கள் கோவிந்தசாமி, நீலமேகம், பஞ்., செயலாளர் ஜெய-ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

