நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னஏரி நிரம்பல்
அரூர், நவ. 22-
அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. வடகிழக்கு பருவமழையால், கடந்த அக்., 19ல் தடுப்பணை நிரம்பியது. தொடர்ந்து, தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வரட்டாற்றில் செல்கிறது. இந்நிலையில் வரட்டாற்றில் இருந்து வரும் தண்ணீர் மூலம், தாதராவலசையில் உள்ள சின்ன ஏரி நேற்று நிரம்பி வழிந்தோடியது. இதனால், சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.