நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2026 02:32 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், முதற்கட்டமாக, 5 ஏக்கர் பரப்பில் அரசு தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடக்கிறது. இதை மாவட்ட கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வத்தல்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றவர் அங்கு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் பதிவு விபரம், மருந்தகம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுக-ளுக்கு சென்று கேட்டறிந்தார்.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விஷ முறிவு சிகிச்சைகள் மற்றும் விஷ முடிவு சிகிச்சைகளுக்கான மருந்துகள் இருப்பு உள்-ளிட்ட பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சரவணன், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், மருத்துவமனைகளை துாய்-மையாக பராமரித்தல் குறித்தும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்-ளிட்ட அடிப்படை தேவைகளை சரியான முறையில் வழங்க மருந்துவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.வத்தல்மலை சுற்றுலா மையத்திலுள்ள ஓட்டல் தமிழ்நாடு உண-வகம் மற்றும் சுற்றுலா தளத்தின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, தோட்டக்கலை மற்றும் மலைப்ப-யிர்கள் துறை துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரம், உதவி சுற்-றுலா அலுவலர் லவிஷா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
