ADDED : ஆக 14, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த முத்தம்பட்டி ஜொல்-லன்கொட் டாய் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகள் தீபிகா, 19. இவர், தர்மபுரி தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
நேற்று முன்-தினம் வீட்டில் இருந்தவர் இரவு, 8:30 மணியளவில் வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றவர், நெடு நேரமா-கியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க-வில்லை. பொம்மிடி போலீசில் அவர் அளித்த புகாரில், அத்திம-ரத்துார் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சஞ்சீவன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
