ADDED : ஜூலை 22, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி
மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.துரிஞ்சிப்பட்டியை
சேர்ந்தவர் ராமசந்திரன், 60. இவருக்கு சொந்தமாக,
அலமேலுபுரத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது.
இது
கடந்த, 2 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இக்கல்லுாரியில், கடந்த,
19ல் இரவு ஆய்வு கூட பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த, ஒரு கம்பரசர்
மோட்டார், ஒரு சின்ன மோட்டார், 50 கிலோ எடை கொண்ட லேப் லேத் பொருட்கள், 11
பீஸ் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து
புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில்
பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த லோகநாதன், 25, பொருட்களை
திருடி சென்றது தெரிந்து அவரை கைது செய்தனர்.
