ADDED : டிச 09, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த, மாதேஹள்ளி பஞ்., அலுவலகம் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இதில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெண்களுக்கான கோலப்போட்டி நடத்த அப்பகுதி, தி.மு.க.,வினர் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். வெற்றி பெற்ற பெண்களுக்கு புடவை, சில்வர் குடம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கின.
எந்தவித அனுமதியுமின்றி, அரசு பள்ளி வளாகத்தில், அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்தியதாக, மாதேஹள்ளி பஞ்., தலைவர் கோவிந்தசாமி, பாப்பாரப்பட்டி போலீசில் நேற்று புகார் மனு அளித்தார்.