/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லாரி மீது கார் மோதல் கட்டட மேஸ்திரி பலி
/
லாரி மீது கார் மோதல் கட்டட மேஸ்திரி பலி
ADDED : அக் 18, 2024 02:55 AM
லாரி மீது கார் மோதல்
கட்டட மேஸ்திரி பலி
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 18---
பாப்பிரெட்டிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 35. தனியார் பள்ளி டிரைவர். தர்மபுரி அடுத்த புழுதிகரை, சவுளூரை சேர்ந்தவர் முரளி, 29, கட்டட மேஸ்திரி. நண்பர்களான இருவரும், ராஜேஷின் ஸ்கோடா காரில் சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பினர்.
காரை ராஜேஷ் ஓட்டினார். சாமியாபுரம் கூட்ரோட்டில் நேற்று மாலை, 6:00 மணியளவில் வந்தபோது, தனியார் கிழங்கு மில் அருகே, எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியதில் கார் நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த முரளி உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராஜேஷ் காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் வந்து அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து நடந்த இடத்தை தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் பார்வையிட்டார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பலியான முரளிக்கு லட்சுமி என்ற மனைவியும், மகன், 2 மகள்கள் உள்ளனர்.