ADDED : ஆக 09, 2026 02:59 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம்,
கடத்துார் அடுத்த அஸ்திகிரியூரை சேர்ந்-தவர் செல்வம், 33. கட்டட மேஸ்திரி.
நேற்று இவரது விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதானது.
இதை நேற்று
காலை, 10:00 மணிக்கு செல்வம் மற்றும் உறவினர்கள் கிணற்றில் இறங்கி மேலே
எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, செல்வம் கால் தவறி கிணற்றின் செட்
பகுதியில் விழுந்து காயம-டைந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.
பாப்பிரெட்டிப்பட்டி தீய-ணைப்பு வீரர்கள் மற்றும் கடத்துார் போலீசார்,
செல்வத்தின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
