ADDED : டிச 14, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 12 அதிகாலை முதல், கன-மழை பெய்யத் துவங்கியது.
பரவலாக விட்டு விட்டு பெய்த மழை நேற்று, இரண்டாவது நாளாக கொட்டித் தீர்த்தது. இதனால், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங் உள்ளிட்ட பகு-தியில் உள்ள செலம்பை, கல்லாறு மற்றும் கலசப்பாடி காட்-டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது, சித்தேரி மலைப் பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அவை சீர-மைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.