ADDED : நவ 09, 2026 01:11 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தீபாவளி பண்டிகையையொட்டி பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பகுதி இறைச்சி கடைகளில் ஏராளமானோர் குவிந்தனர். ஆட்டிறைச்சி கிலோ, 750 ரூபாய், ஒரு பங்கு, 500 ரூபாய் எனவும், ஒன்னரை பங்கு, 1,000 ரூபாய் எனவும் விற்பனையானது.
மீன் வகைகளில் ஜிலேபி, கட்லா, ரோகு, பாறை, போன்ற மீன் வகைகள் கிலோ, 150 முதல், 200 ரூபாய் வரை விற்பனையானது. பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் மட்டும், 10 டன் மீன்கள் விற்பனையாகின. இதில் வாணியாறு அணையில் மட்டும், ஒரு டன் மீன் விற்பனையானது என, விற்பனையாளர்கள்
தெரிவித்தனர்.
