/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி லோக்சபா தொகுதியில் களத்தில் 24 வேட்பாளர்கள்
/
தர்மபுரி லோக்சபா தொகுதியில் களத்தில் 24 வேட்பாளர்கள்
தர்மபுரி லோக்சபா தொகுதியில் களத்தில் 24 வேட்பாளர்கள்
தர்மபுரி லோக்சபா தொகுதியில் களத்தில் 24 வேட்பாளர்கள்
ADDED : மார் 31, 2024 04:08 AM
தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதியில், 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 25 மனுக்கள் உறுதி செய்யப்பட்டது. இதில் நேற்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர், தன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாந்தி முன்னிலையில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில், அ.தி.மு.க., வேட்பாளர் அசோகனுக்கு, இரட்டை இலை சின்னம், தி.மு.க., வேட்பாளர் மணிக்கு உதயசூரியன் சின்னம், பா.ம.க., வேட்பாளர் சவுமியாவுக்கு மாம்பழம் சின்னம், நா.த.க., வேட்பாளர் அபிநயாவுக்கு ஒலி வாங்கி சின்னம், பி.எஸ்.பி., வேட்பாளர் அரிக்கு யானை சின்னம், இந்திய ஜன சங்கம் கட்சிக்கு வெண்டைக்காய் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதேபோன்று, தேசிய மக்கள் கழகம் வேட்பாளர் தங்கவேலுக்கு தர்பூசணி சின்னம், தமிழர் மக்கள் கட்சி வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கிணறு சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் மணி பெயரில், 3 சுயேச்சைகள், அ.தி.மு.க., வேட்பாளர் அசோகன் பெயரில், 3 சுயேச்சைகள், பா.ம.க., வேட்பாளர் சவுமியா பெயரில் ஒரு சுயேச்சை வேட்பாளர் களத்தில் உள்ளனர்.

