sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மனைவியை கொலை செய்த தொழிலாளி போலீஸில் சரண்

/

மனைவியை கொலை செய்த தொழிலாளி போலீஸில் சரண்

மனைவியை கொலை செய்த தொழிலாளி போலீஸில் சரண்

மனைவியை கொலை செய்த தொழிலாளி போலீஸில் சரண்


ADDED : ஜூலை 24, 2011 01:10 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அருகே மனைவியை கொலை செய்த தொழிலாளி போலீஸில் சரண் அடைந்தார்.

தர்மபுரியை அடுத்த கோணங்கிநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முனுசாமி (36). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு கோகிலா (14), புஷ்பம் (12), மணிவாசகம் (10) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரிக்கு அவரது உறவினர் மகாதேவனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை முனுசாமி கண்டித்து வந்தார். ஆனால், கள்ளத்தொடர்பை ராஜேஸ்வரி கைவிடவில்லை. நேற்று முன்தினம் தர்மபுரிக்கு மனைவியை பைக்கில் அழைத்து வந்த முனுசாமி மீண்டும் ஊருக்கு திரும்பும் போது, இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.



ஆத்திரம் அடைந்த முனுசாமி ஏ.முத்தம்பட்டி ஆஞ்சநேய கோவில் அருகே பைக்கை நிறுத்தி விட்டு, அந்த பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு ராஜேஸ்வரியை அழைத்து சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பிணத்தை அங்கே போட்டு விட்டு சென்றார். நேற்று காலை அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் மனைவியை கொலை செய்த விபரத்தை கூறி முனுசாமி சரண் அடைந்தார். போலீஸார் கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us