sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது

/

இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது

இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது

இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது


ADDED : செப் 03, 2011 12:14 AM

Google News

ADDED : செப் 03, 2011 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அருகே இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவரை, போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னிஅள்ளியை சேர்ந்த துரைசாமி மகன் சக்திவேல் (28). மாரண்டஹள்ளியில் உள்ள தனியார் பால் கம்பெனியில் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், தர்மபுரி அடுத்த பாப்பாரப்பட்டி, குப்பட்டமருதஹள்ளியை சேர்ந்தவ முருகன் மகள் பிரியா (17) என்பவரை திருமண ஆசைக்காட்டி காதலித்து வந்துள்ளார். ப்ளஸ் 2 முடித்து வீட்டில் இருந்து பிரியா சக்திவேலின் காதலுக்கு மயங்கி அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இது குறித்து பிரியாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததையடுத்து, பிரியாவை சக்திவேலுக்கு திருமணம் செய்து வைத்தனர். முதல் திருமணம் செய்ததை மறைத்து பிரியாவை இரண்டாவது திருமணம் செய்த சக்திவேல் தனியாக வீடு எடுத்து பிரியாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து சக்திவேலின் முதல் மனைவி பிரியாவுக்கு கூறியதையடுத்து, தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த சக்திவேல் குறித்து பாப்பாரப்பட்டி போலீஸில் பிரியா புகார் செய்தார். பாப்பாரப்பட்டி போலீஸார் சக்திவேலை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us