/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
/
தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
ADDED : ஜூன் 26, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்தில், தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி, நிலைய அலுவலர் செந்தில் குமார், தலைமையில் நடந்தது.
இதில் வெள்ளத்தில் பொதுமக்கள், கால்நடைகள் சிக்கினால் அவர்களை மீட்பது, கிணறு, ஏரிகளில் குளிக்கும்போது நீரில் சிக்கினால் தப்பிப்பது, மீட்பது, உடன் இருப்பவர்கள் தண்ணீரில் சிக்கி மூழ்கும் போது நீளமான குச்சி அல்லது கயிறு மூலம் அவர்களை மீட்பது, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டது.* பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில், தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி, நிலைய அலுவலர்கள் திருத்தணிமுருகன், செல்வம் தலைமையில் நடந்தது.