ADDED : ஜூலை 27, 2026 01:13 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி வட்ட சதுரங்க சங்கம் மற்றும் சக்தி பயிற்சி மையம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட அள-விலான சதுரங்க போட்டி நடந்தது. தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 332- மாணவ, மாண-வியர் கலந்து கொண்டனர். இதில் ஓபன் பிரிவில் விக்னேஷ் முத-லிடமும், ஹர்ஷவர்த்தன், 2ம் இடமும் பிடித்தனர். மாணவியர் பிரிவில், 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், பாவியா, தீக் ஷிதா ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும், 15 வயதுக்கு உட்-பட்டோர் பிரிவில் தான்யா ஸ்ரீ, மதிவதனி முதல் இரண்டு இடங்க-ளையும், 9 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் தக்சன், லோக இசைப்
பிரியன், முதல் இரண்டு இடங்களையும் பிடித்தனர்.
அதேபோல், 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில் ரிஷ்வந்த், யாழிலன் ஆகியோர், முதல் இரு இடங்களை பிடித்தனர். 13 வய-துக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் அர்ஜூன், யஷ்வந்-தேஸ்வர் முதல் இரண்டு இடங்களையும், 15 வயதுக்கு உட்-பட்ட பிரிவில் சந்தோஷ், முகேஷ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்ட சதுரங்க சங்க நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இந்த போட்-டியில் மாநில அளவிலான நடுவர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
