/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு
/
அரூரில் தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு
ADDED : செப் 07, 2025 01:10 AM
அரூர் தர்மபுரி மேற்கு மாவட்டம், அரூர் தெற்கு ஒன்றிய தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று நடந்தது. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தென்னரசு முன்னிலை வகித்தார்.
தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் முல்லை செழியன் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில், செட்ரப்பட்டி, அக்ரஹாரம், கொளகம்பட்டி, எச்.தொட்டம்பட்டி ஆகிய பஞ்.,களை சேர்ந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், பி.எல்.ஏ.,2, பி.டி.ஏ., மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும், 2026ல் மீண்டும், தி.மு.க., ஆட்சி அமைய வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, பிரசாரம் செய்வது, முப்பெரும் விழா மற்றும் கிளை செயற்குழு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.