/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே ஸ்டேஷன் கோரிக்கை விவகாரம் தி.மு.க.,- - வி.சி., கட்சியினர் தள்ளுமுள்ளு
/
ரயில்வே ஸ்டேஷன் கோரிக்கை விவகாரம் தி.மு.க.,- - வி.சி., கட்சியினர் தள்ளுமுள்ளு
ரயில்வே ஸ்டேஷன் கோரிக்கை விவகாரம் தி.மு.க.,- - வி.சி., கட்சியினர் தள்ளுமுள்ளு
ரயில்வே ஸ்டேஷன் கோரிக்கை விவகாரம் தி.மு.க.,- - வி.சி., கட்சியினர் தள்ளுமுள்ளு
ADDED : ஆக 06, 2025 01:24 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே மூக்கனுாரில், ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது குறித்து நடந்த ஓட்டெடுப்பு கூட்டத்திற்கு வந்த, தி.மு.க., - -வி.சி., கட்சியினர் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில், மொரப்பூர் - தர்மபுரி ரயில் பாதை திட்டத்தில், ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த மூக்கனுாரில், மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதை வலியுறுத்தி, கடந்த, 31 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மூக்கனுாரில் ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது குறித்து, ஓட்டெடுப்பு நடத்த, நில உரிமையாளர் குடியிருப்போர் என, 206 பேருக்கு வருவாய்த்துறை சார்பில், சம்மன் அனுப்பப் பட்டது. நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஒட்டெடுப்பிற்கு கலெக்டர் சதீஸ், டி.ஆர்.ஓ., கவிதா தலைமை வகித்தனர். இதில் கலந்து கொள்ள, சம்மன் பெற்ற, 204 பேர் வந்திருந்தனர். அதில், ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் என்பதை ஆதரித்து, தர்மபுரி மாவட்ட வி.சி., - த.வெ.க., கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். ரயில்வே ஸ்டேஷன் வேண்டாம் என்பதை வலியுறுத்தி, தி.மு.க., நிர்வாகிகள் ஒரு சிலர் வந்திருந்தனர்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன், தி.மு.க., -- வி.சி., கட்சியினர் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை சமரசம் செய்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில் ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் என, 162 பேரும், வேண்டாம் என, 42 பேரும் ஓட்டளித்தனர். இதில், ரயில்வே ஸ்டேஷன் மூக்கனுாரில் வேண்டும் என்ற கோரிக்கை, ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் முடிவெடுக்கும் என, டி.ஆர்.ஓ., கவிதா தெரிவித்தார்.

