/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., வார்டு செயலாளர்கள் கூட்டம்
/
தி.மு.க., வார்டு செயலாளர்கள் கூட்டம்
ADDED : நவ 20, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, தி.மு.க., அலுவலகத்தில், 45 வார்டுகளின் வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநகர செயலாளர் மேயர் சத்யா தலைமை வகித்தார். அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
பகுதி செயலாளர்கள் துணை மேயர் ஆனந்தய்யா, வெங்கடேஷ், ராமு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை, வார்டுதோறும் சிறப்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர்., குறித்து, மாநகர செயலாளர் மேயர் சத்யா விளக்கி கூறினார்.

