UPDATED : நவ 01, 2026 02:16 AM
ADDED : நவ 01, 2026 01:51 AM

தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, தி.மு.க., மகளிர் அணி சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், த.வெ.க., அரசை கண்டித்து, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மேற்கு மாவட்ட அமைப்பாளர் கவிதா ஆகியோர் தலைமை வகித்தனர். தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாதது மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அதிகரித்து வரும் போதை கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மசெல்வன், நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கவுதம், நகராட்சி சேர்மன் லட்சுமி மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
