ADDED : அக் 05, 2025 01:21 AM
பென்னாகரம், மஹாபாரதத்திலுள்ள பஞ்ச பாண்டவர்களை மையமாக கொண்டு, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில், திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, திரவுபதி, தர்மராஜர், பீமன், அர்சுனன், சகாதேவன், நகுலன், கிருஷ்ணன் உள்ளிட்ட, 17 கடவுள்களின் சிலை உள்ளது.
பென்னாகரம் சுற்றுவட்டார பிரசித்தி பெற்ற இக்கோவில், கூத்தப்பாடி, குள்ளாத்திரம்பட்டி, பொச்சாரம்பட்டி, அளேபுரம், அக்ரஹாரம், மடம் உள்ளிட்ட, 7 கிராமங்களுக்கு பொதுவானது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 3வது சனிக்கிழமை இக்கோவில் திருவிழா தொடங்குவது வழக்கம்.
நேற்று தொடங்கிய திருவிழாவில், கூத்தப்பாடியில் சுவாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. தொடர்ந்து சுவாமி சிலைகள் குள்ளாத்திரம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று தீமிதி விழா
நடக்கிறது.
தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மீதமுள்ள 5 கிராமங்களுக்கு சுவாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வழிபாடு நடக்கும்.