/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் அவதி
/
குடிநீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் அவதி
ADDED : மார் 11, 2025 06:32 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நடவடிக்கை எடுக்காத பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடத்த போவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாலஜங்கமனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட குடிப்பட்டி காலனியில், 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு பஞ்., நிர்வாகம் சார்பில், உள்ளூர் நீர் ஆதாரம் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கபட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.
இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும்- மாணவர்கள், பணிக்கு செல்வோர் தவித்து வந்தனர். இதில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி, பஞ்., நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இதேநிலை தொடர்ந்தால், பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.