ADDED : ஜூன் 02, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழக வெற்றி கழகத்தின் பேரூராட்சி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். தர்மபுரி மேற்கு மாவட்ட செய-லாளர் சிவா மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் ஆகியோர், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், அரசு, தனியார் பள்-ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, கேடயங்கள் வழங்கப்பட்டது.