UPDATED : அக் 30, 2026 04:29 AM
ADDED : அக் 30, 2026 01:50 AM

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புறாக்கல் உட்டையை சேர்ந்தவர் சகுந்தலா, 60, இவர், வசித்து வரும் இடத்திற்கு கடந்த, 2008ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடம், தனக்கு சொந்தமானது என பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயி முருகன், 42, உரிமை கொண்டாடி வந்துள்ளார். கடந்த, 10ம் தேதி சகுந்தலா குடியிருக்கும் வீட்டை, முருகன் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளார். இது குறித்து சகுந்தலா அரூர் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த, 27ம் தேதி நள்ளிரவு, 12:30 மணிக்கு சகுந்தலா வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது அங்கு, டூவீலர்களில் வந்த அடையாளம் தெரியாத, 6 பேர் சகுந்தலாவின் முகத்தில் மிளகாய்ப்பொடி துாவி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து, பொக்லைன் வாகனம் மூலம் சகுந்தலா வசிக்கும் தகர கொட்டகை மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து புகார்படி அரூர் போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர்.
