ADDED : ஜூலை 06, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, மாரண்டஅள்ளி அருகே பெரியதோப்பை சேர்ந்தவர் நடராஜன், 70. சொந்த வேலையாகநேற்று முன்தினம் வீட்டிலிருந்து டூவீலரில், 5-வது மைல்கல் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதி படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்தார். மாரண்டஅள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.