ADDED : ஆக 24, 2026 01:59 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: திருவண்ணாமலையை சேர்ந்தவர் அந்தோணி, 60. இவர் குடும்-பத்தை பிரிந்து பொம்மிடி பகுதியில் பேப்பர் மற்றும் பாட்-டில்கள் எடுத்து விற்று வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் இரவு வேப்பாடி மாரியம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தின் மீதிருந்து தவறி கீழே விழுந்ததில் இறந்தார்.
பொம்மிடி போலீசார் நேற்று மாலை அந்தோணியின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
