/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இளைஞர்கள் சேர்ந்து அமைத்த மின் விளக்கு
/
இளைஞர்கள் சேர்ந்து அமைத்த மின் விளக்கு
ADDED : டிச 08, 2025 08:49 AM

தர்மபுரி அருகே, கிராமப்புற சாலையில் மின்வி-ளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதிய-டைந்து வந்த நிலையில், நேற்று இளைஞர்கள் சேர்ந்த மின்விளக்கு அமைத்தனர்.
தர்மபுரி அடுத்துள்ள, பழைய தர்மபுரி பஞ்., உட்-பட்ட சவுளு முனியப்பன் கோவில் பகுதியில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சின்னதோப்பில் இருந்து சவுளு முனியப்பன் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இதில், சின்னத்தோப்பு பகுதியில் மரங்கள் அடர்ந்து காணப்படுவதாலும், அதே சமயம், சாலைகள் வளைவாக இருப்பதால், இரவு நேரங்களில் அப்ப-குதி வழியாக செல்லும் மக்கள் வெளிச்சமின்-மையால், அச்சத்துடன் சென்று வந்தனர். சம்மந்-தப்பட்ட இடத்தில், மின்விளக்கு அமைக்க வேண்டும் என, பஞ்., நிர்வாகத்தில் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அங்கு மின் கம்-பங்கள் இல்லாததால், பஞ்., நிர்வாகம் மின் விளக்கு அமைக்காமல், கால தாமதம் செய்து வந்தனர்.
அதையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் ஒன்றி-ணைந்து, நேற்று சின்னத்தோப்பு பகுதியில் உள்ள, சாலை வளைவுகளில் மூன்று இடங்-களில், 5,000 ரூபாய் மதிப்பில் இரும்பு கம்பங்கள் அமைத்து, மின்விளக்கு ஏற்பாடு செய்தனர்.

