/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி ஆய்வு
/
மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி ஆய்வு
ADDED : நவ 12, 2024 01:43 AM
மின்னணு பயிர் சாகுபடி
கணக்கெடுப்பு பணி ஆய்வு
தர்மபுரி, நவ. 12-
தர்மபுரி அருகே, மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்த பின் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், 479 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில், மின்னணு சாகுபடி முறையில், 9.25 லட்சம் சர்வே எண்கள் உட்பிரிவுகளுடன் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று முதல், வரும், 21 வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிக்காக, 259 மாணவர்கள். 520 மாணவியர் என மொத்தம், 779 பேர், இப்பணிக்காக தர்மபுரி வந்துள்ளனர்.
வேளண் பல்கலை கழகங்கலிருந்து வந்த இவர்களுடன், 192 அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மாணவர்களும், வட்டாரத்துக்கு, 4 குழுக்களாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 8 வட்டாரத்துக்கும், 32 குழுக்களாக பிரிக்கப்பட்டு நேற்று முதல் மின்னணு பயிர் சாகுபடி மதிப்பீட்டு செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வட்டார அளவில் ஒவ்வொறு குழுவுக்கும், ஒரு தலைவர் பொறுப்பேற்று, சர்வே எண் விடுபாடின்றி மின்னணு பயிர் சாகுபடி மதிப்பீடு செயலியில் பதிவேற்றம் செய்வதை கண்காணிக்க நியமிக்கப்பட்டள்ளனர்.
இவ்வாறு பதிவேற்றத்துக்காக தங்கள் கிராமத்துக்கு வரும் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்களுக்கு, கிராம பிரதிநிதிகளும் பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு நல்கி, இப்பணிகளை விரைந்து முடிக்க, உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.